Published : 16 Feb 2018 03:27 PM
Last Updated : 16 Feb 2018 03:27 PM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடிக்கு காங்கிரஸே பொறுப்பு என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடி புகாருக்கு ஆளான நிரவ் மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில், இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
‘‘இந்தியாவை சூறையாடுவது எப்படி என்பது பற்றி நிரவ் மோடி நாட்டிற்கு வழிகாட்டியுள்ளார், பிரதமர் மோடியை கட்டிப்பிடி. பின் டாவோஸ் மாநாட்டில் அவரை சந்தித்துப் பேசு. இதை பயன்படுத்தி பல கோடி ரூபாயை மோசடி செய். பின்னர் மல்லையா பாணியில் நாட்டை விட்டு தப்பியோடி விடலாம். ஆனால் மத்திய அரசு அவரை வேறு வழிகளில் தேடிக் கொண்டிருக்கும்’’ எனக் கூறினார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணயின் சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘பஞ்சாப் நேஷன் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோடி செய்த புகாருக்கு ஆளான நிரவ் மோடியின், பெயர் பிரதமர் மோடியின் பெயரை ஒத்து இருப்பதால் அதை வைத்து காஙகிரஸ் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது கேவலமான அரசியல். பாஜக மீது ஊழல் புகார் சொல்ல முடியாததால், ஊழலில் தொடர்புடையவர்களை பாஜகவுடன் தொடர்புபடுத்த காங்கிரஸ் எண்ணுகிறது. காங்கிரஸ ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தன.
நேஷனல் ஹெரால்டு, 2ஜி ஊழல் என பல ஊழல்களை நானே அம்பலப்படுத்தினேன். நிரவ் மோடியின் மீது பல புகார்கள் உள்ளன. இந்த மோசடி நடக்க அனுமதித்த காங்கிரஸ் தற்போது எங்களை விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.
ஊழல் நடக்க நாங்கள் அனுமதித்ததாக கூறும் காங்கிரஸ், அவர்கள் ஆட்சியில் நடந்ததை பற்றி என்ன சொல்கிறது. இந்த விவகாரத்தில் எங்கள் அரசுக்கு பொறுப்பில்லை என நான் கூறவில்லை. அதேசமயம் தனது பொறுப்பையும் உணர்ந்து காங்கிரஸ் பேச வேண்டும்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT