Published : 04 Mar 2024 07:32 AM
Last Updated : 04 Mar 2024 07:32 AM

புகையிலை, போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய நகரங்கள், கிராமங்களில் புகையிலை, போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12-ம் நிதியாண்டில் இந்திய நகரங்களில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவினம் ரூ.2,630 ஆக இருந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் குடும்ப மாதாந்திர செலவினம் ரூ.6,459 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல கடந்த 2011-12-ல் இந்திய கிராமங்களில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவினம்ரூ.1,430 ஆக இருந்தது. கடந்த 2022-23-ல் குடும்ப மாதாந்திர செலவினம் ரூ.3,773 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் சராசரி செலவினம் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2022-23-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு கிராமங்களில் குடும்ப செலவினம் ரூ.5,310 ஆகவும் நகரங்களில் ரூ.7,630 ஆகவும் உள்ளது. புதுச்சேரி கிராமங்களில் குடும்ப மாதாந்திர செலவினம் ரூ.6,590 ஆகவும் நகரங்களில் ரூ.7,706 ஆகவும் உள்ளது.

கேரள கிராமங்களில் மாதாந்திர குடும்ப செலவினம் ரூ.5,924, நகரங்களில் ரூ.7,070, ஆந்திர கிராமங்களில் ரூ.4,870, நகரங்களில் ரூ.6,782, தெலங்கானா கிராமங்களில் ரூ.4,802, நகரங்களில் ரூ.8,158, கர்நாடக கிராமங்களில் ரூ.4,397, நகரங்களில் ரூ.7,666 ஆகவும் உள்ளது.

கடந்த 2011-12-ல் இந்திய கிராமங்களில் புகையிலை, போதை பொருட்களின் பயன்பாடு 3.21 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த சதவீதம் 3.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இதேபோல கடந்த 2011-12-ல் இந்திய நகரங்களில் புகையிலை, போதை பொருட்களின் பயன்பாடு 1.61 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23-ல் இந்த சதவீதம் 2.43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய கிராமங்களில் கல்விக்கான செலவு 3.49 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த சதவீதம் 3.30 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதேபோல கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய நகரங்களில் கல்விக்கான செலவினம் 6.9 சதவீதமாக இருந்தது. கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த சதவீதம் 5.78 சதவீதமாக குறைந்திருக்கிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011-12-ல் கிராமங்களில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவுரூ.1,430 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x