Published : 02 Mar 2024 06:18 AM
Last Updated : 02 Mar 2024 06:18 AM
புதுடெல்லி: புகையிலை வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் பன்ஷிதார் புகையிலை நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரோல்ஸ்ராய்ஸ், லம்போர்கினி உள்ளிட்ட பல வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ரூ.4.5கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
வட இந்தியாவில் பன்ஷிதார் புகையிலை நிறுவனம் பான்மசாலா பொருட்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனம் உண்மையான வருமானத்தை மறைத்ததுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து வருமான வரித்துறை (ஐடி) டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 20 குழுக்களாக பிரிந்து அந்நிறுவனத்துக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டது.
இதில் புகையிலை நிறுவனத்தின் வாரிசான சிவம் மிஸ்ராவின் டெல்லி வசந்த் விஹார் வீட்டிலிருந்து மட்டும் ரோல்ஸ்ராய்ஸ், போர்ஸ், லம்போர்கினிஉள்ளிட்ட ரூ.50 கோடி மதிப்புள்ளவெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்கள் நம்பர் பிளேட் அனைத்தும் 4018 என்ற பதிவெண்ணை கொண்டதாக இருந்தது.
கான்பூர், டெல்லி, மும்பைமற்றும் குஜராத் மாநிலத்தின் பலநகரங்களில் நடைபெற்ற இந்தசோதனையில் பல முக்கியஆவணங்களுடன் ரூ.4.5 கோடிரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
கே.கே.மிஸ்ராவின் பன்ஷிதார் புகையிலை நிறுவனத்தின் உண்மையான விற்றுமுதல் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடியாக இருக்கும் நிலையில், ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை மட்டுமே வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டங்களை மீறியதுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பிலும் பன்ஷிதார் புகையிலை நிறுவனம் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT