Published : 16 Feb 2018 12:46 PM
Last Updated : 16 Feb 2018 12:46 PM
ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஒரு கோழிப்பண்ணையில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 7 கூலித் தொழிலாளர்கள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமநேர் அருகே உள்ள மரும் எனும் கிராமத்தில் எஸ்.வி கோழிப்பண்ணை உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அந்த கோழிப்பண்ணையில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தப்படுத்தும் பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக இவர்கள் அருகே உள்ள பலமநேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பலமநேர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT