Published : 01 Mar 2024 06:37 AM
Last Updated : 01 Mar 2024 06:37 AM
போபால்: மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் அம்ஹாய் தேவ்ரி கிராமத்தை சேர்ந்த 30-க்கும்மேற்பட்டோர் ஷாபுரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் பிறகு மினி லாரி ஒன்றில் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பட்ஜார் காட் என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் இவர்களின் லாரி திடீரென கவிழ்ந்து, 40-50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் 7 ஆண்கள், 6 பெண்கள், ஒரு சிறுவன் என மொத்தம் 14 பேர்உயிரிழந்தனர். மேலும் 20 பேர்காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஷாபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கபிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம்வழங்க ம.பி. முதல்வர் மோகன்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT