Published : 05 Aug 2014 10:52 AM
Last Updated : 05 Aug 2014 10:52 AM
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட் டால் பாதிக்கப்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்.அக் ஷயா உள்ளிட்ட 4 பேர் உச்ச நீதி மன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-15-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தோம். எங்களது மருத்துவ மாணவர் சேர்க்கை தர வரிசை 923, 928, 932 மற்றும் 854 ஆகும். மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித் துள்ள உத்தரவுப்படி, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், எங்களுக்கு இடம் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால், எங்களின் வாய்ப்பு பறிபோயுள் ளது. எனவே, எங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு சட்ட விரோதமாக பின்பற்றி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும். இதனால், தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கவுடா ஆகி யோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் சிவபால முருகன் ஆகியோர் ஆஜராகினர்.
கே.எம்.விஜயன் வாதிடும் போது, “கடந்த 20 ஆண்டுகளாக இப்பிரச்சினை நிலுவையில் உள்ளது. இதற்கு ஒரு முடிவு காணும் வகையில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும். இடைக்கால உத்தரவாக கடந்த கல்வி ஆண்டில் வழங்கியதைப் போல், 19 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கி, எம்பிபிஎஸ் இடம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புகள் ஏற்கெனவே அமலில் உள்ளன” என்று வாதிட்டது.
இதையடுத்து, எம்.பி.பி.எஸ். தர வரிசையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 2014 15-ம் கல்வியாண்டில் கூடுதல் இடங்களை உருவாக்கி, இடமளிக்க இடைக்கால உத் தரவு பிறப்பித்த நீதிபதிகள், கூடுதல் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மனு குறித்து, தமிழக அரசு 4 வாரங் களுக்குள் பதிலளிக்க உத்தர விட்டனர். மேலும் இந்த பதி லுக்கு மாணவர்கள் சார்பில் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை அடுத்தமாத இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT