Published : 20 Feb 2018 09:41 AM
Last Updated : 20 Feb 2018 09:41 AM
ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் மைசூருவில் இருந்து பெங்களூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தார்.
நேற்று (திங்கள்கிழமை) பயணம் மேற்கொண்ட அவர் பயணத்தின்போது பொதுமக்களிடம் ரயில்வே சேவைகள் குறித்து கேட்டறிந்தார். ரயில்வே அமைச்சர் தங்களுடன் பொதுப் பெட்டியில் வருவதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அவருடன் கைகுலுக்கி பேசினர். சிலர் குறைகளையும் குறிப்பிட்டனர். ரயில் பெட்டிகளில் கழிவறைகளின் சுகாதாரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். ரயில்வே அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT