Published : 25 Feb 2024 05:41 AM
Last Updated : 25 Feb 2024 05:41 AM

3 புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங் கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம்,இந்திய குற்றவியல் நடைமுறைசட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இந்தச் சட்டங்களைபின்பற்றித்தான், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தச் சட்டங்கள் காலமாற்றத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இந்தச் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் காலனி ஆதிக்க காலகுறியீடுகளை மாற்றி அமைக்கும்வகையிலும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புதிய 3 குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவரும் இந்த புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

தீவிரவாதம் குறித்து பாரதியநியாய சன்ஹிதா சட்டத்தில்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேச துரோகப் பிரிவு நீக்கப்பட்டு அரசுக்கு எதிரான குற்றங்கள் என்ற புதிய பிரிவு அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x