Published : 25 Feb 2024 05:53 AM
Last Updated : 25 Feb 2024 05:53 AM

திருப்பதிக்கு வயது 894: தேவஸ்தானம் கொண்டாட்டம்

திருப்பதி நகரம் உருவாகி 894 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திருப்பதியில் நேற்று ராமானுஜரின் உருவ படத்தை கையில் ஏந்தி திரளானோர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

திருப்பதி: திருப்பதி நகரம் உருவாகி நேற்றோடு 893 ஆண்டுகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு ராமானுஜர் 893 ஆண்டுகளுக்கு முன் விஜயம் செய்துள்ளார்.

அப்போது அவர் கோவிந்த ராஜ சுவாமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு பின்னர் ராமானுஜரே அக்கோயிலின் கும்பாபிஷேகத்தையும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடத்தியுள்ளார்.

இதில், பங்கேற்கும் போது தான்திருப்பதி நகரம் என பெயர் சூட்டியதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி தெரிவித்தார். ஆதலால், நேற்றோடு, 893 ஆண்டுகள் நிறைவடைந்து 894-வது ஆண்டுபிறந்தது எனவும் அவர் கூறினார்.

இதனையொட்டி, கோவிந்தராஜர் கோயிலில் இருந்து தேவஸ்தான அறங்காவலர் கருணாகர்ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்று திருப்பதி நகரின் முக்கிய வீதிகளில் ராமானுஜரின் திருவுருப்படத்தை கையில் ஏந்தியபடி நேற்று ஊர்வலமாக சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x