Published : 24 Feb 2018 07:29 AM
Last Updated : 24 Feb 2018 07:29 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலையை உயர்த்த எதிர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடமிருந்து வசூலிக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த கூடாது என ராயலசீமா போராட்ட சமிதியினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சேவைகளில் திரளான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். நேர்த்திக் கடனாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கின்றனர். கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை, ஊஞ்சல் சேவை, சுப்ர பாதம், ஏகாந்த சேவை போன்ற தினசரி சேவைகள் மட்டுமின்றி, விஷேச பூஜை (திங்கள்), அஷ்ட தள பாத பத்மாராதனை (செவ்வாய்), சகஸ்ர கலசாபிஷேகம் (புதன்), திருப்பாவாடை சேவை, பூலங்கி சேவை (வியாழன்), அபிஷேகம் (வெள்ளி) என வாராந்திர சேவைகள் நடத்தப்படுகிறது. இந்த சேவைகளுக்கு ரூ. 600 முதல் 12,250 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த ஆலோசனை நடத்தப்படுவதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இதற்கு பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு நேற்று திருப்பதியில் ராயலசீமா போராட்ட சமிதி எனும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாத விலைகளை உயர்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த திட்டத்தை தேவஸ்தானம் உடனடியாக கைவிட வேண்டுமென இந்த அமைப்பின் தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x