Published : 19 Feb 2018 02:55 PM
Last Updated : 19 Feb 2018 02:55 PM
ஹைதராபாத் ஹைடெக்ஸில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு மாநாட்டை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொளி மூலம் தொடக்கி வைத்தார்.
தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் ஹைடெக்ஸில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாட்டை இன்று காலை டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கருந்தரங்கு நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு வருகை புரிந்திருக்கும் பல்வேறு வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இந்தியா, ஹைதராபாத் வரவேற்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டிலுள்ள ஒரு லட்சம் கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைத்துள்ளோம். டிஜிட்டல் இந்தியாவாக எங்களது பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுகள் மட்டுமின்றி, இதில் மக்களின் பங்கும் மிக முக்கியம்.
320 மில்லியன் ஜன்தன் சேவைகள் மூலம் அரசுக்கு இதுவரை ரூ. 57 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. 470 விவசாய மார்க்கெட்டுகள் டிஜிட்டல் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டிஜிட்டல் கல்வித் திட்டம் மூலம் 60 மில்லியன் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மூலம் அரசுக்கு பெருமளவில் லாபம் கிடைத்துள்ளது.''
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 2,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT