Last Updated : 07 Feb, 2018 02:59 PM

 

Published : 07 Feb 2018 02:59 PM
Last Updated : 07 Feb 2018 02:59 PM

‘முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க கூடாது’: பாஜக எம்பி வினய் கட்டியார் பேச்சால் வெடித்தது சர்ச்சை

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது அவர்கள் இங்கு இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரித்துவிடுவார்கள் என்று பாஜக எம்.பி.வினய் கட்டியார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு இதுபோல் பேசிய வினய் கட்டியார், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தேஜ் கோவிலாக மாற்றப்படும் என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், “ இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை யாரைனும் பாகிஸ்தானியர்கள் என அழைத்தால், அவர்களைக் கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

அவரின் பேச்சுக்கு பதிலடியாக பாஜக எம்.பி.வினய் கட்டியார் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கி இருக்ககூடாது. அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரிதித்துவிடுவார்கள்.

இந்தியாவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன?. அவர்களுக்குதான் இடம் கொடுக்கப்பட்டுவிட்டதே. அவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்லலாம்.

வந்தே மாதரம் பாடலுக்கு யாரெல்லாம் மதிப்பு அளிக்காமல் இருக்கிறார்களோ?, தேசியக் கொடியை மதிக்காமல் இருக்கிறார்களோ?, யாரெல்லாம் பாகிஸ்தானின் கொடியை கையில் வைத்து இருக்கிறார்களோ? அவர்களை தண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x