Published : 17 Feb 2024 05:49 AM
Last Updated : 17 Feb 2024 05:49 AM
சென்னை: இந்திய வரலாற்றில் சில தலைவர்கள் மட்டுமே தங்கள் தடங்களை ஆழமாகப் பதித்துள்ளனர். இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் அவர் பிரதமராகபதவியேற்றார். அவரது தொலைநோக்கு பார்வை, கொள்கைகளால் புதிய இந்தியா உருவாகி வருகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையால் சர்வதேச அரங்கில் அசைக்கமுடியாத சக்தியாக இந்தியாஉருவெடுத்திருக்கிறது.
ஒரு காலத்தில் வறுமை நிறைந்த, வளர்ச்சி குறைந்த நாடாகவே இந்தியா அறியப்பட்டது. பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா முற்றிலுமாக மாற்றம் அடைந்து வருகிறது. பொருளாதாரரீதியாக அதிவேகமாக வளரும் நாடு என்ற சாதனையை எட்டி உள்ளோம்.
பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகள், நட்புரீதியான அணுகுமுறையால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை, வளமான எதிர்காலத்துக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சர்வதேசநாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. பருவநிலை மாறுபாட்டை தடுப்பதில் பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் முக்கிய பங்காற்றி வருகிறார். அவரது முயற்சியால் சர்வதேச சூரிய கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது.
ராமர் கோயில் கனவு நனவானது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு அண்மையில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம்இந்தியர்களின் 500 ஆண்டு காலதவத்துக்கு பலன் கிடைத்திருக்கிறது. ஆன்மிகம் மற்றும் கலாச்சார பெருமை மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. அதோடு மதச்சார்பின்மையையும் கட்டிக் காப்பாற்றப்படுகிறது. இந்தியாவின் கலாச்சாரம், சமூக ஒற்றுமையை காப்பாற்றும் உன்னத தலைவராக பிரதமர் மோடி போற்றப்படுகிறார்.
பொருளாதாரத்துக்கு புத்துயிர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல் செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்றதுணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. வரி வசூல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப் பட்டு உள்ளது.
370-வது சட்டப்பிரிவு வெற்றிகரமாக நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்நிய முதலீடு அதிகரித்துவருகிறது. புதிய சாலை, ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பு பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றிருக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்: நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன.
டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. யுபிஐ, ஆதார்அடிப்படையிலான டிஜிட்டல்சேவைகளால் நாட்டின் நகரங்களும்கிராமங்களும் சரிசமமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் புதிய இந்தியா உருவாகிவருகிறது. வலுவான, வளர்ச்சி அடைந்த இந்தியா கம்பீரமாக எழுந்து நிற்கிறது. நமது நாடுஅதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் தலைமை போற்றிபுகழப்படுகிறது. இந்த சாதனைகளை படைத்த பிரதமர் மோடி.நவீன இந்தியாவின் தந்தை,சிற்பி என்று நினைவுகூரப் படுவார். அவரது தலைமையில் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகள், நனவாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT