Published : 14 Feb 2024 05:45 AM
Last Updated : 14 Feb 2024 05:45 AM

சமுதாய வானொலி நிலையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரமாக அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் உறுதி

சென்னை: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து மண்டலசமுதாய வானொலி சம்மேளனம் (தெற்கு) என்ற நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தின. இதில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:

உள்ளூர் மொழிகளில்... ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சமுதாய வானொலி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என 2002-ல்திட்டமிடப்பட்டது. 2004-ல் அப்போதைய மத்திய அமைச்சர்எல்.கே.அத்வானி இந்த சமுதாயவானொலி சேவையைத் தொடங்கிவைத்தார். இந்த வானொலி உள்ளூர் மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்காக தொடங்கப்பட்ட இந்த சமுதாய வானொலி, பின்னர் கிராமப் பகுதிகளில் உள்ளமக்களுக்குத் தேவையான தகவல்களையும் அளித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் 481 சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளன. இது, அடுத்த3 ஆண்டுகளில் ஆயிரம் வானொலி நிலையங்களாக அதிகரிக்கப்படும்.

சமுதாய வானொலி நிலையம் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மத்திய தகவல்ஒளிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சமுதாய வானொலி நிலையத்தின் கூடுதல் இயக்குநர் கவுரிசங்கர்கேசர்வானி, இந்தியன் இன்ஸ்டிடியூட் மாஸ் கம்யூனிகேஷன் சமுதாய வானொலி நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சங்கீதா பிரான்வேந்த்ரா, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜே.பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x