Published : 11 Feb 2024 05:23 AM
Last Updated : 11 Feb 2024 05:23 AM
புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு நாட்டில் உள்ள மரணதண்டனை கைதி எண்ணிக்கை561-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தேசிய சட்ட பல்கலைக்கழகம் சார்பில் `இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளியியல் அறிக்கை' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் உள்ள மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 561-ஆக உயர்ந் துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 120 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை, 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது ஆண்டாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT