Published : 23 Feb 2018 05:09 PM
Last Updated : 23 Feb 2018 05:09 PM
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைகளுடன், தங்கள் உற்பத்திக்கான நியாயவிலை, கடன் தள்ளுபடி ஆகிய பிரச்சினைகளினால் சமீபத்தில் விவசாயிகள் போராடிய வேளையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் பார்கவாதான் இந்தச் சர்ச்சைக்குரிய நபர் ஆவார்.
“எம்.எல்.ஏ.க்கள் கூடத்தான் சாகிறார்கள். நஷ்டம் ஏற்படும்போது வர்த்தகர்கள் கூட சாகிறார்கள், பரீட்சையில் தோல்வியடையும் போது மாணவர்களும் சாகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 எம்.எல்.ஏ.க்கள் இறந்துள்ளனர். மரணத்தை யாரேனும் கட்டுப்படுத்த முடியுமா? எம்.எல்.ஏ.க்கள் என்ன சாகாவரம் பெற்றவர்களா?” என்று அமைச்சர் பார்கவா கேட்டார்.
ஆனால், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மீது தனக்கு கருணை உண்டு என்று போகிற போக்கில் தெரிவித்தார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT