Published : 06 Feb 2024 06:37 AM
Last Updated : 06 Feb 2024 06:37 AM
பெங்களூரு: உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது.
உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் ஜியோலொகேஷன் தொழில்நுட்ப அமைப்பு 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களில் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. அதில் உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு அலுவலக நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 35 நிமிடங்கள் ஆகின்றன. இந்த வரிசையில் அயர்லாந்து தலைநகர் டப்ளின் 2-ம் இடத்தில் உள்ளது.
கடந்த 2022-ல் 2-ம் இடத்தில் இருந்த பெங்களூரு தற்போது 6-ம் இடத்தில் உள்ளது. அலுவலக நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்களும் 10 விநாடிகளும் செலவாகிறது. அலுவலக நேரத்தில் சுமார் 10 கிலோமீட்டர் பயணிப்பவர்கள் மட்டும் ஓர் ஆண்டுக்குச் செல விடும் நேரம் சுமார் 129 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தநேரத்தில் பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் இருந்து மட்டும் சுமார் 974 கிலோ கார்பன் மாசு வெளியேற்றப்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT