Published : 04 Feb 2024 04:58 PM
Last Updated : 04 Feb 2024 04:58 PM

ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை பார்த்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜென்ட் கைது

பிரதிநிதித்துவப்படம்

லக்னோ: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்தகாக கூறு ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ-க்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

தீவிரவாத எதிர்ப்பு பிரிவால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டவர், உத்தரப் பிரதேசத்தின் ஹப்புர் மாவட்டத்தின் ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தில் வசிக்கும் ஜெய்வீர் சிங்கின் மகன், சதேந்தர சிவால் என்றும், அவர் வெளியுறுத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தற்போது அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பினர் இந்தியாவின் ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதாக, இந்தியாவின் வெளியுறவுத்துறையில் வேலை செய்யும் சில நபர்களிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்காக வேலை செய்ய தூண்டியுள்ளதாக பல்வேறு ரகசிய தகவல்கள் ஏடிஎஸ்க்கு வந்தன.

இதுதொடர்பாக ஏடிஎஸ் மின்னணு சாதனங்கள் மற்றும் நேரடியாக நடத்திய விசாரணையில், சதேந்தர சிவால் ஐஎஸ்ஐ அமைப்பினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் பணத்துக்காக பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ-க்கு வழங்கியுள்ளார்.

சதேந்தர சிவால் மீரட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு பிரிவு இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் விதிகளுக்கிணங்க விசாரணை நடத்தப்பட்டது. அவரால் உரிய பதிலைத் தெரிவிக்க முடியவில்லை. விசாரணையில் சிவால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் IBSA-ஆக பணிபுரிந்து வந்த சதேந்தர சிவால் மீது லக்னோவில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு போலீஸார், ஐபிசி பிரிவு 121ஏ, அதிகார ரகசியங்கள் சட்டம் 1923 ஆகியவைகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x