Published : 01 Feb 2024 08:04 AM
Last Updated : 01 Feb 2024 08:04 AM

இடைக்கால பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.

இந்திய நிதி அமைச்சர்களில் மிக அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். அவர் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, மொத்தமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். இவற்றில் 1959–1964 வரை 5 முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என 6 பட்ஜெட்களை தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்தார்.

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் நிர்மலா சீதாராமன்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்படுவது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x