Published : 29 Jan 2024 06:30 AM
Last Updated : 29 Jan 2024 06:30 AM
புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் பொதுமக்கள் வெளியே பயணம் செய்ய முடியாத அளவுக்கு நேற்று அதிகாலை உறைய வைக்கும் குளிரும் அடர் பனியும் காணப்பட்டது. இதனால், அங்கு விமானம் மற்றும் ரயில் சேவை தாமதமானது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றும். அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸைத் தாண்டாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் காணப்பட்ட அடர் பனியால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
பனி மூட்டத்தால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அதேபோல், ரயில் சேவையும் தாமதமாகின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT