Published : 25 Jan 2024 07:17 AM
Last Updated : 25 Jan 2024 07:17 AM

அயோத்தி ராமர் கோயில் திறப்பால் உ.பி.க்கு ரூ.4 லட்சம் கோடி வருவாய்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித் துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகளின் அடிப்படையில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு அயோத்திக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 3 லட்சமாக விரைவில் அதிகரிக்க கூடும். ஒவ்வொரு பக்தரும் தோராயமாக ரூ.2,500 செலவு செய்தால் அயோத்தியின் உள்ளூர் பொருளாதாரம் மட்டும் ரூ.25,000 கோடி அதிகரிக்கும். இது, உத்தர பிரதேச பொருளாதாரத்துக்கு மகத்தான ஊக்கத்தை அளிக்கும்.

ராமர் கோயில் மற்றும் சுற்றுலாவை மையமாகக் கொண்ட பிற முயற்சிகள் காரணமாக, உத்தரபிரதேசத்தில் 2024-25-ல் ரூ.5,000 கோடி வரை வரி வசூல் கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்த அளவில் இந்த ஆண்டு ரூ.4 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

5 கோடி பக்தர்கள்.. வெளிநாட்டு ஆய்வு நிறுவனமான ஜெஃப்ரிஸ் கூற்றின்படி, அயோத்தி நகரத்துக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வாடிகன் சிட்டி, மெக்காவை விஞ்சும் அளவுக்கு இருக்கும். அதன்படி அயோத்தி ஆண்டுக்கு 5 கோடி பக்தர்களை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. இது, உ.பி. மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.

திருப்பதி ஆண்டுக்கு 2.5 கோடி பக்தர்களை ஈர்ப்பதன் மூலம் ஆந்திரா ரூ.1,200 கோடி வருமானத்தை ஈட்டுகிறது. வைஷ்ணவதேவி கோயில் ஆண்டுக்கு80 லட்சம் பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் ரூ.500 கோடி வருமானத்தையும், ஆக்ராவில் உள்ளதாஜ்மஹால் ஆண்டுக்கு 70 லட்சம்சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன்மூலம் ரூ.100 கோடி வருவாயையும், ஆக்ரா கோட்டைக்கு 30 லட்சம் பயணிகள் வருவதன் மூலம் ரூ.27.5 கோடி வருவாயும் ஈட்டப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x