Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

இறுதி நேரத்தில் முன்பதிவு நிலவரத்தில் மாற்றம்: பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவு

இறுதி நேரத்தில் முன்பதிவு நிலவரத்தில் மாற்றம் செய்ததால் பாதிப்படைந்த பயணி ஒருவருக்கு ரூ. 25,000 இழப்பீடாக வழங்க ந்திய ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் குறைதீர் மன்றம்.

சண்டிகரைச் சேர்ந்தவர் டாக்டர் மோஹித் ஜெயின். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பைக்கு ஒரு மாநாட்டுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். அப்போது ஆர்.ஏ.சி.யாக இருந்த அவரின் முன்பதிவு நிலவரம் ரயில் புறப்படும் தினத்தன்று இறுதி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாறியது.

இந்தத் தகவலையும் தனக்கு இறுதி நேரத்தில் சொன்னதால் தன்னால் மாற்று பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறி அவர் புது டெல்லி நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கை விசாரித்த நடுவர் அமர்வு, "ரயில் பெட்டிகளில் ஒன்று பழுதடைந்திருப்பதை இறுதி நேரத்தில் கண்டுபிடித்து அந்தப் பெட்டியை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதைப் பற்றி ரயில்வே நிர்வாகம் முன்பே அறிந்திருக்க வேண்டும். ஆக, ரயில்வே நிர்வாகத்திடம் உள்ள தவறால் பயணி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு இழப்பீடாக ரூ.25,000 வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x