Last Updated : 16 Feb, 2018 11:50 AM

 

Published : 16 Feb 2018 11:50 AM
Last Updated : 16 Feb 2018 11:50 AM

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம்: உ.பி.யில் சோகம்

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

சம்பல் பகுதியில் வயல்வெளியில் தனது தாத்தாவுக்கு உதவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்தார். அவரை அவரது உறவினர்கள் சம்பல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும், உடனே சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை பார்க்கிங் பகுதி வரைக்கும் தோளில் சுமந்து சென்ற உறவினர் சொந்த ஊருக்கு பைக்கிலேயே சடலத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து அந்த உறவினர் கூறும்போது, "சிறுவன் இறந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் உடனடியாக சடலத்தை அப்புறப்படுத்துமாறு எங்களை வற்புறுத்தினர். எங்களுக்கு ஸ்ட்ரெட்சர், ஆம்புலன்ஸ் என எந்த வசதியும் தர மறுத்தனர். இதனால், சிறுவனை எனது தோளில் சுமந்து வந்து பைக்கில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு வந்தோம்" என்றார்.

மறுக்கும் மருத்துவமனை..

ஆனால், இந்த குற்றச்சாட்டை சம்பல் அரசு மருத்துவமனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் மருத்துவமனையில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளைக் கூட முடிக்காமல் சிறுவனின் உறவினர்கள் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். போலீஸுக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனச் சொன்னதால் அவர்கள் அங்கிருந்து உடனே சென்றுள்ளனர். அவர்கள் எங்களிடம் கோரியிருந்தால் நிச்சயமாக ஆம்புலன்ஸ் வழங்கியிருப்போம் எனக் கூறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x