Published : 10 Jan 2024 06:17 AM
Last Updated : 10 Jan 2024 06:17 AM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையிலிருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆந்திரா-சென்னைஇடையே விமான நிலையங்கள், துறைமுகத்துக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்யமுடிவு செய்யப்பட்டது. திருப்பதியிலிருந்து சென்னை மார்க்கத்தில் உள்ள ரேணிகுண்டாவை அடுத்துள்ள காஜுல மான்யம் வரை ஏற்கெனவே 4 வழிச்சாலை உள்ளது.
ஆதலால், இங்குள்ள கல்லூர் கூட்டுச்சாலை பகுதியிலிருந்து, புத்தூர், நகரி, திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வரை இந்த சாலையைஅகலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவில் 37 கிலோமீட்டர் தூரமும், தமிழகத்தில் 43 கிலோமீட்டர் தூரமும் 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக இது விஸ்தரிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT