Published : 27 Dec 2023 02:21 PM
Last Updated : 27 Dec 2023 02:21 PM

இந்தியாவில் அதிகரிக்கும் ஜேஎன்.1 பாதிப்பு: ஒரே நாளில் 529 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.,27) தெரிவித்துள்ளது.

புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் குளிர் காலத்துக்கு பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஐ எட்டியுள்ளது. இந்த பாதிப்பால் கர்நாடகா, கேரளா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கோவாவில் 14 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கேரளாவில் 6 பேரும், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா நான்கு பேரும் மற்றும் தெலங்கானாவில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நோயாளிகள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கர்நாடகாவில் இருவரும், குஜராத்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு நாடு முழுவதும் மொத்தமாக இதுவரை 4,44,72756 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 5,33,340 பேர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் நேற்று புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x