Published : 11 Dec 2023 11:04 AM
Last Updated : 11 Dec 2023 11:04 AM

பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை 6-வது முறையாக சம்மன் 

ஹேமந்த் சோரன் | கோப்புப்படம்

ராஞ்சி: நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளதாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் நாளை (டிச.12) ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத் துறையால் அனுப்பட்ட 6 வது சம்மன் இது. என்றாலும் அமலாக்கத் துறையின் நடவடிக்கையில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்ததால் அவர் பதவி விலகவில்லை.

சுரங்கங்களின் உரிமையை சட்டவிரோதமாக மாற்றும் மிகப்பெரிய மோசடி ஜார்க்கண்டில் நடப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இதுவரை, ஜார்க்கண்ட் சமூகநலத்துறை இயக்குநராகவும், ராஞ்சியின் ஆணையராகவும பணியாற்றிய 2011ம் வருட பேச்ட் ஐஏஎஸ் அதிகாரியான சாவி ராஜன் உட்பட 14 பேரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான 48 வயது ஹேமந்த் சோரன், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுரங்கமுறைகேடு தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x