Published : 03 Dec 2023 01:54 PM
Last Updated : 03 Dec 2023 01:54 PM

சில முக்கிய அமைச்சர்கள், காங். மூத்த தலைவர்களுக்கு பின்னடைவு @ ம.பி. தேர்தல்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இன்று காலை 8 மணி தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சில முக்கிய அரசியல் தலைவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தான் போட்டியிட்ட டாடியா தொகுதியில் மூன்றாவது சுற்று நிலவரப்படி பின்தங்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர பாரதியை விட 2,950 வாக்குகள் பின்தங்கியுள்ளார். மத்திய இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நிவாஸை விட 11,500 வாக்குகள் பின்தங்கியுள்ளார். இவர் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தப்பட்ட மூன்று எம்பிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர தோமர் மற்றும் பிரகாலாத் பாடீல் மற்ற இருவர்.

ராவு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜித்து பட்வாரி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மது வர்மாவை விட 14,735 வாக்குகள் பின்தங்கியுள்ளார். அதேபோல் இந்தூர் 1 தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான சஞ்சய் சுக்லா 28,217 வாக்குகள் பின்தங்கியுள்ளார். இவரை எதிர்த்து கைலாஷ் விஜயவர்கியா போட்டியிட்டார். லஹர் தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அம்ரீஷ் சர்மா குட்டுவை விட 4,163 வாக்குகள் பின்தங்கியுள்ளார். இவர் நான்கு முறை எம்எல்ஏவாகவும், கமல்நாத் ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை விட தனிப்பெரும்பான்மையுடன் 162 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பாஜகவின் முன்னிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச மக்களின் இதயத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடியின் இதயத்தில் மத்தியப்பிரதேச மக்கள் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா, மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான எண்ணங்கள் இல்லை. பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்காக பிரதமர் மோடி அதிகமான பணிகளை செய்துள்ளார். எங்களுடைய அரசும் அவர்களுக்காக பணியாற்றியுள்ளது. இது பிரதமர் மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் உறுதி மொழிக்கு கிடைத்த ஆசீர்வாதம்" என்று தெரிவத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x