Published : 03 Dec 2023 11:19 AM
Last Updated : 03 Dec 2023 11:19 AM

முதல்வர் கேசிஆரை முந்தும் காங். மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி @ தெலங்கானா தேர்தல்

கே.சந்திரசேகர ராவ் (இடது), ரேவந்த் ரெட்டி (வலது)

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவை கம்மாரெட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி. அவர் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஹைதராபாத் நகர்ப்புற பகுதியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி தெலங்கானாவில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், ஆளும் பிஆர்எஸ் 42 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். கஜ்வெல் மற்றும் கம்மாரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கினார். காஜ்வெல் தொகுதியில் கேசிஆர் முன்னிலை வகிக்கிறார். அதேவேளையில், கம்மாரெட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி. அவர் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு ஒரே கட்டமாக நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 221 பேர் பெண்கள், ஒருவர் 3-ம் பாலினத்தை சேர்ந்தவர். மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள். இதில், ஆண்கள் 1.62 கோடி பேரும், பெண்கள் 1.63 கோடி பேரும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,676 பேர். இம்முறை புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், அதாவது, 18-19 வயதினர் மட்டும் 9.99 லட்சம் பேர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அங்கு கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது.

தெலங்கானாவில் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தெரிவித்தது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று கணித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அலுவலகம் முன்னால் திரண்ட தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x