Published : 24 Jan 2018 07:57 AM
Last Updated : 24 Jan 2018 07:57 AM
பக்தர்களால் ‘மினி பிரம்மோற்சவம்’ என்றழைக்கப்படும் ரத சப்தமி விழா இன்று திருமலையில் கொண்டாடப்பட உள்ளது. இன்று ஒரே நாளில் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து 7 வாகனங்களில் உற்சவரான மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதையொட்டி, ஏழுமலையானைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்காக உணவு, குடிநீர், மோர், கைக்குழந்தைகளுக்கு பால் போன்றவை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம், போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ரத சப்தமியையொட்டி இன்று திருமலையில் காலை 5.30 மணிக்கு சூரிய பிரபை, இதனை தொடர்ந்து 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 11 மணிக்கு கருட சேவை, மதியம் 1 மணிக்கு அனுமன் வாகனம், 2 மணிக்கு சக்கர ஸ்நானம், மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனம், மாலை 6மணிக்கு சர்வ பூபால வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனம் என தொடர்ந்து வாகன சேவைகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT