Published : 23 Nov 2023 07:35 AM
Last Updated : 23 Nov 2023 07:35 AM
ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 80 வயது நிரம்பிய முதியோர் வீட்டில் இருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் ஹைதராபாத்தில் இந்த திட் டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
966 முதியோர் விண்ணப்பிப்பு: இதற்காக ஹைதராபாத் மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் இருந்து இதுவரை 966 முதியோர் விண்ணப்பித்தனர். இவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தகுதியான 857 பேரை தேர்ந்தெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு 3 நாட்கள் முன்னரே அவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கேயே ‘பூத்’ அமைத்து, அவர்களுக்கு வாக்கு சீட்டு வழங்கப்பட உள்ளது.
அவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளருக்கு வாக்களித்து அதனை தேர்தல் அதிகாரியிடம் வழங்க உள்ளனர். பின்னர் வாக்காளர் முன்பாக அந்த கவர் சீல் வைக்கப்படும். அதன் பின்னர் வாக்களித்தவர் 13ஏ படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இம்மாதம் 27-ம் தேதிக்குள் முதியோர் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT