Published : 21 Nov 2023 07:49 AM
Last Updated : 21 Nov 2023 07:49 AM
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிலவிஷமிகளின் செயல்களால் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந் திருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென நள்ளிரவு 11.30 மணிக்கு அந்தபடகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்க மீனவர்கள் முயற்சி செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்ததீயணைப்பு படையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் 45 படகுகள் தீயில் கருகி நாசமடைந்தன. படகுகளில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் பிடிக்கப்பட்டு, படகை மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.
மறுநாள் காலையில் மீன்களைவிற்பனை செய்யலாம் என மீனவர்கள் நினைத்திருந்தனர். அதற்குள்இந்த தீ விபத்து ஏற்பட்டு பலத்தநஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினர். முதற்கட்ட விசாரணையில் யாரோ விஷமிகள் சிலர்,அங்குள்ள ஒரு படகில் மது விருந்து வைத்துள்ளனர் என்றும், அப்போது அந்த படகிலேயே சமைக்கவும் செய்துள்ளனர் என்றும், இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆந்திர மீன் வளத்துறை அமைச்சர் அப்பலராஜு, முன்னாள் அமைச்சர் அவந்தி, விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் மல்லிகார்ஜுன், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் நேற்று காலை வந்து நேரில் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் மீன் வளத்துறை அமைச்சர் அப்பலராஜு பேசும்போது, “மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த தீ விபத்தில் 39 படகுகள் முற்றிலுமாகவும், 9 படகுகள் லேசாகவும் தீக்கிரையாகி உள்ளன. நஷ்டம் அடைந்தவர்களுக்கு 80 சதவீதம்வரை அரசு உதவி செய்யும். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரண மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT