Published : 20 Nov 2023 04:09 PM
Last Updated : 20 Nov 2023 04:09 PM

5 மாநில தேர்தல் | ரூ.1,760 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், மது, ரொக்கம் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களையொட்டி, இதுவரை ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான அக்டோபர் 9 முதல் இதுவரை போதைப் பொருட்கள், பணம், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ரூ. 239.15 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதைவிட 7 மடங்கு அதிக மதிப்புள்ள பொருட்கள் இம்முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x