Published : 28 Jan 2018 04:55 PM
Last Updated : 28 Jan 2018 04:55 PM
பாரத ரத்னா விருது பெற்றவரும், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ பாஜகவை விரிவுபடுத்தவும், அதன் பிரசாரத்துக்காகவும் உழைக்கும் மனிதர்களுக்குதான் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.
குறிப்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் வேத் பிரகாஷ் நந்தா, கேரளா ஆர்எஸ்எஸ் தலைவர் பி பரமேஷ்வர் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரமேஷ்வர், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களையும், பாஜகவின் கொள்கைகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரசாரம் செய்து, மாநிலத்தில் பாஜக நிலைக்க உதவி செய்கிறார் அதனால், விருது அறிவிக்கப்பட்டது “ எனத் தெரிவித்தார்.
இந்த அறிக்கைக்கு பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
இந்த நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் குடிமகன்கள்தான். அவர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைத்தபோதிலும் அவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. எந்த எதிர்பார்ப்பும், பிரதிபலனும் இல்லாமல் சமூக சேவையை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில், இடதுசாரியைச் சேர்ந்த பாரத ரத்னா விருதுபெற்றவரும், நோபல்பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென்னை நாளந்தா பல்கலையில் தலைவராக தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு ஆக்கியது. நாளந்தா பல்கலையில் கொள்ளயடித்ததைத் தவிர இந்த நாட்டுக்கு அந்த துரோகி என்ன செய்தார்
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT