Published : 01 Jan 2018 10:03 AM
Last Updated : 01 Jan 2018 10:03 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த ஆன்மிகவாதி. ஸ்ரீ ராகவேந்திரர், மஹா அவதார் பாபாவின் பக்தர். ஆனாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் இவருக்கும் கூட நெருங்கிய தொடர்பு உண்டு. ரஜினிகாந்த் மனைவி லதா, சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியாக இருந்தபோது, கல்லூரி சார்பில் ரஜினியை பேட்டி எடுத்தார். அப்போது ரஜினி ‘தில்லு முல்லு’ படப்படிப்பில் இருந்தார். அந்த நேரத்தில் லதா பல கேள்விகளை கேட்டார். இது ரஜினியை வெகுவாக கவர்ந்தது. இதனால் பேட்டியெடுக்க வந்த லதாவிடம் ‘என்னை திருமணம் செய்து கொள்கிறாயா’? என கேட்டுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, இதுகுறித்து பெற்றோரிடம் கேளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு லதா ரங்காச்சாரி, லதா ரஜினிகாந்தாக மாறினார்.
இவர்களது திருமணம் 1981 பிப்ரவரி 26-ம் தேதி திருமலையில் நடைபெற்றது. அப்போதிலிருந்து ஏழுமலையான் மீது ரஜினிக்கு பக்தி அதிகரித்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு திரைப்படமும் வெளியாவதற்கு முன்போ அல்லது வெளிவந்த பின்னரோ அவர் ஏழுமலையானை தரிசிக்க தவறியதில்லை. ஒரு முறை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் ரஜினி பதவி வகித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT