Last Updated : 26 Jan, 2018 04:31 PM

 

Published : 26 Jan 2018 04:31 PM
Last Updated : 26 Jan 2018 04:31 PM

நாட்டின் 59-வது குடியரசு தினம்: உரையில் சொதப்பிய உ.பி. அமைச்சர்

நாடு முழுவதும் இன்று (ஜன.26) 69-வது குடியரசு தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றிய அம்மாநில அடிப்படை மற்றும் உயர் கல்வி இணை அமைச்சர் சந்தீப் சிங் 59-வது குடியரசு தினம் எனக் கூறி சொதப்பினார்.

அலிகாரில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். விழாவில் அவர் பேசும்போது, "இன்று நாம் நமது நாட்டின் 59-வது குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்" எனக் கூறினார்.

லேசான சலசலப்பு ஏற்பட்ட நிலையில் தனது உரையைத் திருத்தி 69-வது குடியரசு தினம் எனக் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தின் அட்ரோலி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., இவர்.

அமைச்சர் ஒருவரே குடியரசு தின விழா குறித்த தகவலை குழப்பத்தில் கூறியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் சலசலத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x