Published : 08 Nov 2023 03:08 PM
Last Updated : 08 Nov 2023 03:08 PM
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.2.5 கோடி மதிப்புள்ள லாட்டரியை வென்றுள்ளார். குடும்பத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பணத்தைச் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லாட்டரி சிலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தாலும் பலருக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது. பலரும் அதிர்ஷ்டத்தை நம்பி உழைத்த பணத்தை லாட்டரி சீட்டு வாங்கச் செலவிட்டு ஏமாற்றமடைகின்றனர். சிலர் அதிர்ஷ்டசாலிகளாக மாறுகின்றனர். அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு நல்ல ஜாக்பாட் அடித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சிங் என்ற விவசாயி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. இவர் தன்னுடைய தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்றுள்ளார். கடைக்குச் சென்ற அவர் ஒரு லாட்டரி சீட்டையும் வாங்கியுள்ளார். இதையடுத்து, மருந்து வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.
அதன் பின்னர் சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, லாட்டரி கடை நடத்தும் உரிமையாளரிடமிருந்து ஒரு போன் வந்ததாகத் தெரிகிறது. அதோடு, ஷீத்தல் சிங் 2.5 கோடி ரூபாய் வென்றதாக லாட்டரி கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். அதன்பிறகு இந்த இன்பகரமான செய்தியைத் தனது குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பணத்தைச் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். லாட்டரி கடையின் உரிமையாளர், கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து வருவதாகவும், வாடிக்கையாளர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் பெறுவது இது மூன்றாவது முறை என்றும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT