Published : 04 Nov 2023 07:22 AM
Last Updated : 04 Nov 2023 07:22 AM
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘மோடியின் 2023-ம் ஆண்டு உத்திரவாதம்’ என்ற பெயரில் பாஜக.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.
முதல்முறை வாக்குச்சாவடி: சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பிராந்தியத்தின் 40 உட்புற கிராமங்களில் முதல் முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. இந்தப் பிராந்தியம் முழுவதும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் இதன் உட்புற பகுதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. இதனால் இந்த கிராமங்களை விட்டு பல கி.மீ. தொலைவில் பாதுகாப்பான இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
மறுபுறத்தில் மாவோயிஸ்ட் அமைப்புகள் தேர்தலை புறக்கணித்து வந்தன. யார் வாக்களித்தாலும் விரலை வெட்டுவோம் என கிராம மக்களை எச்சரித்து வந்தனர். இதனால் கிராம மக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் இப்பிராந்தி யத்தில் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இந்தப் பிராந்தியத்தின் 40 உட்புற கிராமங்களில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிராமங்களில் முதல்முறையாக வாக்குப் பதிவு நடைபெற இருப்பதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT