Published : 04 Nov 2023 06:33 AM
Last Updated : 04 Nov 2023 06:33 AM

தெலங்கானாவில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 10-ம் தேதி கடைசி நாள்

கோப்புப்படம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் நவம்பர் 10-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 30-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

தெலங்கானா சட்டப்பேரவைக் கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் செய்தியாளர்களிடம் நேற்று ஹைதராபாத்தில் பேசியதாவது:

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

வரும் நவம்பர் 10-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதில் வரும் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் 4 செட்கள் வரை தாக்கல் செய்யலாம். இதற்கான டெபாசிட் ஒரு முறை செலுத்தினால் போதுமானது. அஃபிடவிட்டை முழுவதுமாக நிரப்ப வேண்டும்.

119 தொகுதிகளில் 13 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். 2 ஆயிரம் வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நகர்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். மாற்று திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இம்முறை9.10 லட்சம் புதிய வாக்காளர்கள்தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கும் விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.453 கோடி சொத்துகள்: இதுவரை ரூ. 453 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 362 வழக்குகள், அதில் 256 எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக இதுவரை 137 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் பிஆர்எஸ் மீது 13, காங்கிரஸ் மீது 15, பாஜக மீது 5, பகுஜன் சமாஜ்வாதி கட்சி மீது 3 வழக்குகளும் பதிவாகி உள்ளன. தெலங்கானாவில் 3,21,88,753 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பாதுகாப்புக்காக 375 மத்திய ரிசர்வ் படையினர் இடம் பெற உள்ளனர். இவ்வாறு விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x