Last Updated : 30 Jan, 2018 06:26 PM

 

Published : 30 Jan 2018 06:26 PM
Last Updated : 30 Jan 2018 06:26 PM

உ.பி.யில் ஆண்கள் கால்பந்து விளையாடுவதை முஸ்லிம் பெண்கள் பார்க்கக் கூடாது: மதகுரு ஆணை

ஆண்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து கால்பந்து விளையாடுவது முஸ்லிம் பெண்கள் பார்ப்பது, மதத்துக்கு விரோதமானது. அவ்வாறு பார்க்கக்கூடாது என்று தரூல் உலூம் மதகுரு ஆணையிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில், தியோபந்த் நகரில் ஆசியாவில் மிகப் பெரிய தரூல் உலூம் சன்னி முஸ்ஸிம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஏறக்குறைய150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமைப்பில் மாணவர்களுக்கும், மக்களுக்கு உருது, அரபி, புனித குர் ஆன் கற்றுக்கொடுத்து வருகிறது.

இந்த அமைப்பின் மூத்த மதகுரு முப்தி அத்தர் கஸ்மி முஸ்லிம் பெண்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :

ஆண்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து கால்பந்து விளையாடுவதை முஸ்லிம் பெண்கள் பார்ப்பது மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் தங்கள் மனைவியை இதுபோல் கால்பந்து பார்ப்பதை ஆண்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்.

ஆண்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களுக்கு இறை அச்சம் இல்லையா? பெண்களை இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கலமா ?

ஆண்கள் விளையாடும் கால்பந்துப் போட்டிகளை பெண்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? வீரர்கள் விளையாடுவதை பெண்கள் பார்ப்பதன் மூலம் என்ன லாபம் அடையப் போகிறார்கள்?வீரர்களுக்கு பெண்கள் மீது பார்வை சென்றால், அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் மன்னர் கூட அங்குள்ள பெண்கள் ஆண்கள் விளையாடும் கால்பந்துப் போட்டியை மைதானத்துக்குச் சென்று நேரடியாக பார்க்க சமீபத்தில் அனுமதி அளித்தார். ஆனால், இந்தியாவில் முஸ்லிம் மதகுரு இப்படி ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x