Published : 18 Oct 2023 05:46 AM
Last Updated : 18 Oct 2023 05:46 AM
புதுடெல்லி: 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது வரும் 21-ம் தேதி காலை 9 மணிக்குள் ஹரிக் கோட்டா ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை ராக்கெட்டை ஏவ இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ககன்யான் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டம், திட்ட அறிக்கைகள் ஆகியவை விண்வெளித் துறை சார்பில் வழங்கப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத் தின்போது, 2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
2035-ம் ஆண்டுக்குள் இந்தியா வின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும்.
இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும். வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் நாம் பணியாற்ற வேண்டும்.
இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத் தின் வளர்ச்சி, புதிய ராக்கெட் ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வ கங்கள், ஆய்வகங்கள் தொடர் புடைய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளில் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உயரங்களை அடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவாகும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT