Published : 18 Oct 2023 06:13 AM
Last Updated : 18 Oct 2023 06:13 AM
திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும் இரவு முத்துப் பல்லக்கிலும் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பதி நவராத்திரி பிரம் மோற்சவம் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. தசரா விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருமலையில் குவிந்து வருகின்றனர்.
இதனால் நவராத்திரி பிரம்மோற் சவம் களை கட்டியுள்ளது. இதில், 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் யோக முத்திரையில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின்போது, மாட வீதிகளில் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்களும், ஜீயர் குழுவினரும் முன் செல்ல, நடனக் குழுவினரின் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்தது.
மாலையில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு முத்துப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT