Published : 15 Oct 2023 05:30 AM
Last Updated : 15 Oct 2023 05:30 AM

கார் விபத்தில் ஆந்திர முதல்வரின் தாய் உயிர் தப்பினார்

ஓங்கோல்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலமில்லாமல் இருக்கும் திருப்பதிதேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் தாயாரை நலம் விசாரிக்க விஜயலட்சுமி நேற்று காலை கார் மூலம் ஹைதராபாத்தில் இருந்து ஓங்கோலுக்கு சென்றார்.

அப்போது தெலங்கானா மாநிலம் வாடபல்லி எனும் இடத்தில் கார் சென்றபோது முன்னால் சென்ற கார் திடீரென நிதானமாக செல்ல, இவர்களின் கார் பிரேக் அடித்ததால், பின்னால் வந்த கார் இவர்களின் கார் மீது மோதியது. எனினும் அதிர்ஷ்டவசமாக விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட வில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x