Published : 02 Jan 2018 02:43 PM
Last Updated : 02 Jan 2018 02:43 PM
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு முன்பு 16 வயது ஜெய்ஷ்-இ-முஹம்மது தீவிரவாதியும் உள்ளூரைச் சேர்ந்தவருமான ஃபர்தீன் அகமது காண்டேவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஒருவரான ஃபர்தீன் அகமது காண்டே தாக்குதலுக்கு முன்பு பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. ஆயுதங்கள் சூழ எடுக்கப்பட்ட 8 நிமிட வீடியோவில், ''இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது, நான் சொர்க்கத்தில் விருந்தாளியாக இருப்பேன்.
ஜம்மு காஷ்மீரின் இயற்கை வளங்கள் அனைத்தையும் டெல்லி சூறையாடுகிறது. வேலைவாய்ப்பின்மையே காஷ்மீரி இளைஞர்களைத் தீவிரவாதத்தை நோக்கித் தூண்டுகிறது. இஸ்லாமியருக்கு ஜிகாத் கட்டாயம். நம் மதத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்கும்போதும் நம் பெண்களின் குணநலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போதும் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
காஷ்மீரில் அத்தகைய கடைசி வீரர் இருக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
ட்ரால் பகுதியைச் சேர்ந்தவரான காண்டே, காவல்துறை அதிகாரியின் மகன் ஆவார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமான காண்டே ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கத்தில் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT