Published : 10 Oct 2023 07:02 AM
Last Updated : 10 Oct 2023 07:02 AM
டேராடூன்: ஹரியாணாவிலிருந்து கிளம்பிய ஒரு பேருந்து நேற்று உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கலாதுங்கி அருகே 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அறிந்ததும் அங்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மற்றொரு விபத்து: பித்தோரகர் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பித்தோரகர் மாவட்டம் தார்ச்சுலா-லிபுலிகே சாலையில் சென்ற கார் மலைப்பகுதியில் இருந்து உருண்டு பாறைகளுக்கு அடியில் சிக்கியது. இதில், காரில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கார், அப்பகுதியில் ஓட்டல் நடத்தும் ஹரிஷ் சிங் நபியால் என்பவருக்குச் சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல்கள் நசுங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் காரில் 6 பேர் இருந்தார்களா அல்லது 8 பேர் இருந்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT