Published : 08 Oct 2023 05:17 AM
Last Updated : 08 Oct 2023 05:17 AM

இந்தியா, இஸ்ரேல் இடையிலான ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து

புதுடெல்லி: இஸ்ரேல் நாடு உதயமான பிறகு பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வசித்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேலில் குடியேறினர். மேலும் இஸ்ரேல் நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏராளமான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் டெல்லி, இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஏர் இந்தியா விமான சேவையில் நேற்று டெல்லியில் இருந்து டெல் - அவிவ் செல்ல 139 பயணிகளும், டெல்-அவிவ் நகரில் இருந்து டெல்லி வருவதற்கு140 பயணிகளும் முன்பதிவு செய்திருந்தனர். இரு மார்க்கத்திலும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நேபாளிகள் 17 பேர் சிக்கினர்: இஸ்ரேலில் பாலஸ்தீன தீவிரவாதிகள் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 17 பேர் நேபாளத்தை சேர்ந்த மாணவர்கள். இதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் படித்த 7 பேர் காயம் அடைந்துள்ளனர். மற்ற 10 பேர் இஸ்ரேல் வேளாண் கல்லூரியில் பயின்ற மாணவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x