Published : 01 Dec 2017 09:27 AM
Last Updated : 01 Dec 2017 09:27 AM

ஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100

நம் இந்திய நாட்டின் ஒரு ரூபாய் நோட்டிற்கு 100 வயது. இந்திய ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டு இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது.

ஒரு ரூபாய் நோட்டு...ஒரு காலகட்டத்தில் இந்த நோட்டிற்கு தனி மரியாதை இருந்தது. இந்த நோட்டை மிக ஆச்சர்யத்துடன் பார்த்தனர் நம் மக்கள். ஆம். நம் இந்திய ஒரு ரூபாய் நோட்டிற்கு தற்போது 100 வயது. சரியாக கடந்த 30.11.1917-ம் ஆண்டு, இங்கிலாந்தில் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நோட்டின் மீது இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தலை முத்திரையிடப்பட்டிருந்தது. அதுவரை இருந்த நாணயங்களில் சில, முதல் உலக போருக்காக ஆயுதங்கள் தயாரிக்க உருக்கப்பட்டன. இதனால் இந்த கால கட்டத்தில் நாணயங்களுக்கு பதில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.

1917-ல் இந்திய ஒரு ரூபாய் நோட்டு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக கருதப்பட்டது. அப்படி பார்த்தால், இதன் தற்போதைய மதிப்பு ரூ. 390 ஆகும். இதன்படி பார்த்தால் தற்போதைய இந்திய ரூபாயின் மதிப்பு 400 மடங்கு குறைந்துள்ளது என்பதை நாம் உணரலாம். 1917-ல் தினக்கூலி சராசரி ரூ. 1லிருந்து 4 ஆக இருந்துள்ளது. இப்போதும் கூட ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளது. இதுவரை 44 முறை ரூபாய் நோட்டின் நிறம், அளவு, அடையாளங்களை ரிசர்வ் வங்கி மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x