சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி உண்ணாவிரதம்

சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி உண்ணாவிரதம்

Published on

ராஜமுந்திரி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று ஆந்திரா முழுவதும் உண்ணாவிர போராட்டம் நடத்தினர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகிம்சை வழியில் இந்த போராட்டம் நடைபெற்றது.

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, ராஜமுந்திரியிலும், மகன் லோகேஷ் டெல்லியிலும் என்.டி.ஆர், சந்திரபாபு குடும்பத்தினர் ஹைதராபாத்திலும் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

புவனேஸ்வரி கூறும்போது, ‘‘மக்களுக்காக உழைத்த சந்திரபாபு நாயுடுவை சிறையில் வைத்துள்ளனர். ஆந்திராவின் நலனுக்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். அவரது கைது நடவடிக்கையால் இதுவரை 105 பேர் உயிர் துறந்துள்ளனர்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in