Published : 22 Dec 2017 09:56 AM
Last Updated : 22 Dec 2017 09:56 AM

விவாகரத்து பெற்ற பிறகு மனமாற்றம்: தம்பதியை சேர்த்து வைத்தது நீதிமன்றம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், இவருக்கும் குண்டூரைச் சேர்ந்த ஸ்ராவனி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு, விஜயவாடாவிலுள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு 2012-ம் ஆண்டு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. சில ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

இதுகுறித்து இருவரும் விஜயவாடாவில் உள்ள வழக்கறிஞர் ஜெயலட்சுமியை சந்தித்து தங்களது முடிவை தெரிவித்தனர். பின்னர், வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், இருவரும் தங்களுடைய தவறுகளை திருத்திக் கொண்டதாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சேர்ந்து வாழ விரும்புவதாகவும் விவாகரத்தை, ரத்து செய்யுமாறும் மனுவில் கேட்டுக்கொண்டனர். இதனை விசாரணைக்கு ஏற்ற விஜயவாடா குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் அழைத்து விசாரித்தது. பின்னர், அவர்களது விவாகரத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலேயே இருவரும் மாலை மாற்றிக் கொண்டு புது வாழ்வைத் தொடங்க புறப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x