Published : 25 Sep 2023 03:44 PM
Last Updated : 25 Sep 2023 03:44 PM

தொடர்ந்து 13-வது முறையாக தள்ளிப்போன தென் மேற்கு பருவமழை விடைபெறும் நிகழ்வு: ஐஎம்டி தகவல்

புதுடெல்லி: வழக்கத்தைவிட 8 நாட்களுக்குப் பின்னர் தென் மேற்கு பருவமழை விடைபெறத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் 17-ல் விடைபெறும் தென் மேற்கு பருவமழை தற்போது செப்.25-ல் விடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஐஎம்டி.

இது தொடர்பாக ஐஎம்எடி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் மேற்கு பருவமழையானது தென் மேற்கு ராஜஸ்தானில் இருந்து இன்று விடைபெற்றுள்ளது. இது வழக்கமாக செப்.17-ல் நிகழ் வேண்டியது. ஆனால் ஐந்து நாட்கள் கழித்து இன்று (செப்.25) நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இதுபோல் தென் மேற்கு பருவமழை தாமதமாக விடைபெறுவது இது தொடர்ச்சியாக 13-வது முறையாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு ஏன்? - பருவமழை தாமதமாக விடைபெற்றால் மழைக்காலம் நீடித்து விவசாயம் பாதிக்கப்படும். குறிப்பாக, வடமேற்கு இந்தியாவில் ராபி பருவ பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகும். அதனாலேயே பருவமழை தொடங்கும், நிறைவுபெறும் காலங்கள் மிகக் கவனமாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் தென் மேற்கு பருவமழையானது ஜூன் 1-ல் கேரளாவில் தொடங்கி ஜூலை 8 வாக்கில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தேசத்தையும் தொட்டுவிடும். செப்டம்பர் 17 வாக்கில் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெறத் தொடங்கி அக்டோபர் 15-ல் முற்று பெறும். அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் சூழல் உருவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x