Last Updated : 22 Sep, 2023 05:23 AM

1  

Published : 22 Sep 2023 05:23 AM
Last Updated : 22 Sep 2023 05:23 AM

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன்?: ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. ஒவைசி விளக்கம்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி. அசதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாநாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதன்மூலம், நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 33% பெண்கள் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் மக்களவையில் அனைத்து கட்சிகளின் 454 எம்.பி.க்களும் வாக்களித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அசதுதீன் ஒவைசி, இம்தியாஸ் ஜலீல் ஆகிய 2 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி கூறும்போது, “இந்த மசோதாவில் முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் அதை எதிர்த்து வாக்களித்தோம்.

மேலும் எங்கள் கட்சி, முஸ்லிம் மற்றும் ஓபிசியினருக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என்ற தகவல் நாட்டு மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதே அதன் நோக்கம். நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் 7% பேர் உள்ளனர். மேலும் ஓபிசியினர் 50% -க்கு மேல் உள்ளபோது அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு மறுப்பது ஏன்?” என்றார்.

கடந்த 1996-ல் மகளிர் மசோதாமாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கியஜனதா தளம் ஆகிய கட்சிகளின்எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு அம்மசோதாவில் இடஒதுக்கீடு இல்லை என்பதை காரணமாக கூறினர். அவர்கள் கேட்ட ஒதுக்கீடு இம்முறையும் இல்லை என்றாலும் கூட, இந்த 3 கட்சிகளின் எம்.பி.க்களும் தற்போது ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x